இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன்

இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட தமிழின படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து, ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டத்தில் விவாதிக் கப் பட உள்ளன. இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், தமிழின படுகொலைகள் குறித்தும், கடந்த ஜனவரி 27, 2021 அன்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டி ருந்தது. அதில், தற்போது வரை நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகள் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே அரசு கடந்த காலங்களைப் போலவே, தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாகுவம் அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பாக, சிங்கள பேரினவாத அரசு, தமிழர் பகுதிகளை துரித கதியில் ராணுவ மயமாக்கப்பட்டு வரும் நிலை, சிவில் சமூகத்தை அச்சுறுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் ரீதியான மக்களுக்கு இடையூறுகளை தொடர்வது ஐ.நா-வின் அறிக்கையில் விளக்கப்பட்டிருந்தது. மேலும், மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்திலான அரசின் நடவடிக்கைகள் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இலங்கைத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். நீண்ட நெடுங்காலமாக தாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு ஏற்பட வேண்டும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள், பாலியல் கொடுமையில் ஈடுபட்ட ராணுவத் தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்பாகும். எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு உரிய முறையில் தலையிட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக வாழ் வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமை களை பாதுகாப்பது, பறிக்கப்பட்ட நிலங்களை அம்மக்களிடம் ஒப்படைப்பது, தமிழ் பிரதேசங் களிலிருந்து ராணுவ முகாம்களை திரும்பப் பெறுவது, மனித உரிமைகள் போர்க் குற்றங்களில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை மேற் கொள்ள ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் என்றும் இவ் விவகாரத்தில் மோடி அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.