சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னைநாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமுன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ..., அவர்கள் மற்றும் பெருநகரசென்னை காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், .கா.., ஆகியோர் இன்று (29.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி, அண்ணா பல்கலைக் கழக வாக்கு எண்ணும்மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு அறையினை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, ..., தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/ வட்டார துணை ஆணையாளர்கள்திரு.எம்.பி.அமித், ..., (தெற்கு), திரு.கே.ஜெ.பிரவீன் குமார், ..., (மத்தியம்), திரு.கட்டா ரவி தேஜா, ..., (வடக்கு), கூடுதல் காவல் ஆணையாளர் திரு.கபில் குமார் சி. சரட்கர், .கா.., இணை காவல்ஆணையாளர் (கிழக்கு) திரு.ஜி.தர்மராஜன், .கா.., துணை காவல் ஆணையாளர் (மயிலாப்பூர்) திரு.ராஜாட்சதுர்வேதி, .கா.., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.