சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், .கா.. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தH-6 R.K.நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.T.முத்துமணி, K-11 CMBT காவல் நிலைய  ஆய்வாளர்திரு.M.R.ராஜேஷ், காவலர்கள் திரு.பாலமுருகன், திரு.M.வினோத்குமார், திரு.கனகராஜ்,   நவீன காவல்கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு.N.M.ஹேமாசங்கர், தலைமைக்காவலர் திரு.S.A.ரபிக்அகமது, மத்திய குற்றப்பிரிவு  ஆய்வாளர்கள் திருமதி.B.தனலட்சுமி, திரு.S.பூமாறன், திருமதி.L.கலாராணி, திரு.பாலன், திருமதி.முருகேஷ்வரி, திருமதி.மேரிராணி, உதவி ஆய்வாளர்கள் திருமதி.ஞானசித்ரா, திருமதி.S.S. பிரியங்கா, தலைமைக்காவலர்கள் திரு.C.கர்ணன், திரு.D.பத்மராஜ், காவலர்  செல்வி.மேனகா, திருமதி.S.ஶ்ரீகிருத்திகா, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  திரு.P.ராஜேந்திரன், திரு.சங்கரப்பாண்டியன், தலைமை க்காவலர்திருமதி.கடல்கன்னி, C-2 யானைகவுனி காவல் நிலைய தலைமைக்காவலர்  திரு.R.ஶ்ரீதர், R-3 அசோக்நகர்போக்குவரத்து காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திருமதி.M.ஜான்சி ராணி, K-10 கோயம்பேடு காவல்நிலைய காவலர் திரு.I.தவப்பாண்டி,  உதவி ஆய்வாளர்கள் திரு.S.ராமு, (PRO) திரு.ராஜன், திரு.C.சீனிவாசன், திரு.செல்வகுமார், தலைமைக்காவலர் திரு.கர்த்திகைசாமி, Data Entry Operator திரு.பாலரகுபதி, முதல்நிலைக்காவலர் திரு.S.சேகர், திரு.P.பிரபு, திரு.வினோத்,  காவலர்கள் திரு.S.சுடலை, திரு.நாகேந்திரன், திரு.G.லோகேஷ்குமார்,  திரு.M.கௌதம் ராஜ், திரு.கணேசன், திரு.பிரசன்னகுமார், திரு.செல்வம் என மொத்தம் 7 காவல் ஆய்வாளர்கள்,  9 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 26 காவல்  ஆளிநர்கள் என மொத்தம் 42காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (27.04.2024) நேரில் அழைத்து வெகுமதி வழங்கிபாராட்டினார்.

H-6  ஆர்.கே.நகர்  காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்     கொலை வழக்கில்சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்தும்,                   K-11  C.M.B.T காவல் நிலையஆய்வாளர் தலையிலான காவல் குழுவினர் , பயணி ஆட்டோவில் தவறவிட்ட  ரூ.15,9000/- பணத்தை  1 மணிநேரத்தில் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தும், மத்தியகுற்றப்பிரிவு  காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தும், நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்தும் சிறப்பாகபணிபுரிந்துள்ளனர். பாரளுமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணிபுரிந்த  ஆயுதப்படை  உதவி ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர்,  C-2  யானை காவல் நிலைய தலைமைக்காவலர் ஶ்ரீதர் சாலையில் கிடந்த செல்போனை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தும், R-3  அசோக் நகர்  போக்குவரத்து காவல் நிலையமுதல் நிலைக்காவலர் திருமதி.ஜான்சிராணி சாலையில் கிடந்த எண்ணெய் படலத்தின் மீது மண்ணைஅள்ளிப்போட்டு விபத்து ஏற்படுவதை தடுத்தும்,  K-10   கோயம்பேடு காவல்  நிலைய காவலர்  தவப்பாண்டிவழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்தும், மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும்  17 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.