சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் .கா. அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரங்களைஉலகத்தரத்திக்கு உயர்த்த அறிவுறுத்தியதன் பேரில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா, .கா. அவர்கள் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு. சிபி சக்கரவர்த்தி .கா.அவர்களின் அறிவுரைகளின் பேரில் அடையாறு துணை ஆணையாளர் திரு.ரா.பொன்கார்த்திக் குமார்தலைமையின் கீழ் அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள 10 காவல்நிலையங்களுக்கும் ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அடையாறு காவல்மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட 4 காவல் நிலையங்களுக்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது

1. ஜே-3 கிண்டி காவல் நிலையம்  2.ஜே-7 வேளச்சேரி காவல் நிலையம்  3. ஜே-8 நீலாங்கரைகாவல் நிலையம் 4.ஜே-13 தரமணி காவல் நிலையம். காவல்நிலையங்களில் மேற்கண்ட தரச்சான்றிதழ்களை பெறுவதற்காக பல்வேறு மாறுதல்கள் செய்யபட்டுள்ளது. மனுதாரர்களை இன்முகத்தோடு வரவேற்கும் விதமாக காவல் நிலைய வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுஅவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் அலுவலரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் கட்டுமான அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலைய ஆவணங்கள் முறையாக வகைப்படுத்தப்பட்டு குறியீடு செய்து பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வாகன் நிறுத்துமிட வசதிஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனியாக பெண் காவலர்கள்நியமிக்கப்பட்டு அவர்களின் குறைகளை கேட்டறிகின்றனர்.

மேற்படி தரக்கட்டுப்பாட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்த பின்னர் Quest Certification Pvt Ltd நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.கார்த்திகேயன் என்பவர் காவல்நிலையத்தினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து Quality Council of India வின் தரக்கட்டுப்பாட்டிற்கானஅனைத்து தேவைகளையும் அடைந்த பின்னர் மேற்கண்ட காவல் நிலையங்களுக்கு ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை வழங்கினார்.

இன்று (16.03.2024) சென்னை பெருநகர காவல் ஆணையாளர்   திரு.சந்தீப் ராய்ரத்தோர், .கா. அவர்கள், ISO 9001: 2015 தர சான்றிதழ் பெற்றதற்காக மேற்படி 4 காவல் நிலையஎல்லைக்குட்பட்ட உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்தார்.