தமிழக அரசு புதிய அரசு பல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கிட வேண்டும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

வாய் நலம் ஒரு தனி நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. தமிழ்நாட்டில் வாய்வழி நோய் சுமை’ என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும். வாய்வழி சுகாதார கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் பல் சொத்தை பாதிப்பு உள்ளோர் 61.4 விழுக்காடாகும். பல் ஈறு அழற்சி நோய் பரவல் 46 விழுக்காடாகும். ஒழுங்கற்ற முறையில் அமைந்த பற்கள் உடையோர் 30 விழுக்காடாகும். வாய்வழி புற்றுநோயின் பரவல் அனைத்து புற்றுநோய்களிலும் 40 விழுக் காடாகும். 2018 ஆம் ஆண்டின் ஆய்வின்படி தமிழகத்தில் வாய்வழி புற்றுநோய் ஒரு லட்சம் பேரில் 82.9 நபரை பாத்தித்து. ஒரு லட்சம் பேரில் 60.6 பேர் வாய்வழி புற்று நோயால் இருந்துள் ளனர். வாய்வழி புற்றுநோய் இறப்புகள் 2035 க்குள் 20 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு ள்ளது. வாய்வழி புற்றுநோயால் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 5 பேர் இறக்கின்ற னர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும்.அதற்கு பல் மருத்துவ மனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 78% ஆரம்ப சுகாதார மையங்களில் வாய்வழி சுகாதார சேவைகள் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 1421 ஆரம்ப சுகாதார மையங்களில் 385 மட்டுமே பல் மருத்துவர்களைக் கொண்டுள்ளன. இது வருத்தத்தை அளிக் கிறது. பல் மருத்துவத்திற்கென்று, தமிழகத்தில், ஒரே ஒரு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே தமிழக அரசின் சார்பில் உள்ளது சென்னையில் உள்ளது. தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவில் 4 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தென் தமிழ கத்தில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி நிறுவப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2015 ஆம் ஆண்டில் அறிவித்தார்.

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 2017-18 ஆம் ஆண்டில், ரூ 50 கோடியை ஒதுக்கீடு செய்து, அக்கல்லூரிக்கான கட்டிட கட்டுமானத்தைத் தொடங்க உத்தர விட்டார். அனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. இது வருத்தமளிக்கிறது. இக்கல்லூரியை விரைவில் தொடங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் பயனுள்ளவகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய பல்மருத்தவக் கல்லூரிகளை அரசு தொடங்கிட வேண்டும். 2020 ஆம் ஆண்டு வரை , தமிழ்நாடு பல் மருத்துவ கழகத்தில் ,சுமார் 30,000 பல் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 460 பேர் அதாவது சுமார் 1.5 விழுக்காட்டினர் மட்டுமே, தற்போது அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மக்கள் தொகைக்கேற்ப பல் மருத்து வர்கள் இல்லை. அதை சமயம் ,பல் மருத்துவர்கள் வேலை இல்லா திண்டாத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட தாலுக்கா மருத்துவ மனைகளில் கூட பல் மருத்துவர்கள் இல்லை.இதானல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன வாரியம் (எம்ஆர்பி) மூலம் பல் மருத்துவர் களை பணிநியமனம் செய்திட வேண்டும். பல் மருத்துவர்கள் பணி நியமனத்திற்கான தேர்வு 2014 ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே உடனடியாக ,காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களை உருவாக்கி, பல் மருத்துவர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். தனியார் பல் மருத்துவ கிளினிக்குகள், மற்றும் பல் மருத்துவமனைகளில் பணி புரியும் பல் மருத்துவர்களுக்கு , அரசு பல் மருத்துவருக்கு இணையான ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.