தமிழ்ச்சமூகம் உலக நாகரீகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி – ஐந்தாம் கட்ட அகழாய்வை ஆய்வு செய்த பின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி

கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,கீழடி அகழாய்வில் ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவு பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் என்ன பணிகள் நடைபெற்று இருக்கிறது. அதில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடமும் ஆய்வாளர்களிடமும் கேட்டறிந்தேன். நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இந்த ஆண்டு அகழாய்விற்கான இடத்தை தேர்வு செய்து இந்த அகழாய்வை சிறப்பாக நடத்தி இருக்கிற தமிழக அரசின் தொல்லியல் துறையை பாராட்டுகிறேன். இதுவரை தமிழக அகழாய்வில் நவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடைபெறவில்லை. கீழடியில் தான் அது முதல்முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட அகழாய்வில் மிகப்பெரிய அளவிலான தொழிற் கூடங்கள் கிடைத்தது. மூன்றாம் கட்ட அகழாய்வு பெயரளவிற்கு நடைபெற்று கீழடியில் வரலாற்று தொடர்ச்சியில் இல்லை எனக் கூறி ஸ்ரீராமன் தலைமையிலான குழு அறிக்கை அளித்து மத்திய அரசு கீழடி அகழாய்வை மூடியது. அந்த துரோகத்தை தமிழக அரசின் அகழாய்வுத்துறை தற்போது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. ஆனால் தமிழக அகழாய்வுத்துறை இங்கு ஆய்வு செய்து மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உள்ளார்கள். குறிப்பாக பிரமிக்கத்தக்க வகையில் இரண்டாம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தொழிற்கூடத்தின் கட்டமைப்பிற்கு 300 மீட்டருக்கும் அதிகமாக தற்போது கட்டமைப்பை கண்டறிந்து உள்ளார்கள். இது மூன்று ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் அளவிற்கு சமம். தொழிற்கூடத்தின் பரப்பு இப்படி இருக்கும் போது இதனை பயன்படுத்தக்கூடிய நகரமைப்பு எப்படி இருந்து இருக்கும் என்பதை வியப்போடு பார்க்க வேண்டி உள்ளது. கீழடி தமிழர்களின் தாய்மடி என சொல்லிவந்தபடி கிடைப்பதற்கு அறிய பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. அதனை தமிழக அரசு பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளது. கால பகுப் பாய்விற்காக்காக அமெரிக்காவிற்கும் எலும்பு பகுப்பாய்விக்கிறாக புனேடெக்கான் பல்கலைக்கழகத்திற்கும் நிறமாலை பகுப்பாய்விற்காக பைசாபாத் பல்கலைக் கழகம் இத்தாலிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த முடிவுகளின் நிலை குறித்து தமிழக அரசு வெளியிட வேண்டும். கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் இவையெல்லாம் சங்ககால நாகரீகத்தின் வளாகம். இதனை சங்ககால நாகரீகத்தின் வளாகமாக அறிவித்து இந்த இடங்களை பாதுகாப்பதோடு அகழாய்வை தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். அரசியல் விழிப்புணர்வு மூலம் மட்டுமே இதனை பாதுகாக்க முடியும். பாதுகாக்கப்பட்ட இடமாக இதனை அறிவிப்பதன் மூலமே வரலாற்றிக் கான பங்களிப்பை செய்ய முடியும்.

பிரதமரின் சொந்த ஊரில் நடைபெறக்கூடிய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கு காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல் துறை உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரி இருக்கிறது. கீழடிக்கான காட்சியகம் உடனடியாக அமைக்கபப்ட்ட வேண்டும். மதுரையிலும் மரபு சார்ந்த அருங் காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அறைகளை பிரித்து வைப்பது போல் வைத்திடாமல் கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 30 ஆயிரம் கல்வெட்டுகளின் படிகள் மைசூரில் உள்ளது. அதனை பலமுறை தமிழக அரசு கேட்டும் கொடுக்க மறுத்து  வருகிறார்கள். அந்த கல்வெட்டுகளின் படிகள் அழிகிற நிலையில் இருக்கிறது. உடனடியாக அதனை தமிழகத்திற்கு கொண்டு வர துரிதமான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசின் தொல்லியல் துறை கர்நாடகா, மஹாராஸ்ட்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மூன்று மண்டலங்கள் உள்ளன. மண்டலத்திற்கு ஐந்து கோடி வீதம் 15 கோடி நிதி அளிக்கிறார்கள். ஆனால் மொத்த தமிழகத்தையும் ஒரே மண்டலமாக மட்டுமே வைத்துள்ளனர். எனவே தமிழகத்தின் தொல்லியல் துறைக்கு வரக்கூடிய நிதி ஐந்து கோடிக்கும் குறைவாக இருக்கிறது. இந்த தொகையை வைத்துக்கொண்டு ஊழியர்களுக்கான செலவிற்கே சரியாகி விடும். மத்திய அரசு அடுத்த கட்ட பணிகளை பாதுகாக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே தமிழகத்தில் மத்திய தொல்லியல் துறையை இரண்டு மண்டலமாக பிரிக்க வேண்டும். மதுரையை தலைமையிடமாக கொண்டு தென்மண்டலம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் மதுரையில் உள்ள சமணர் படுகைகள், சங்ககால இடங்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தும் அதனை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இரண்டு மண்டலகங்களாக பிரிக்கப்பட்டால்தான் நிதி ஒதுக்கீடு அதிகமாகும். அதிக இடங்களை பாதுக்காக்க முடியும். ஆய்வுகளும் நடத்திட முடியும் என்றார்.

ஆறாம் கட்ட அகழாய்விற்கு அனுமதி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. கீழடி, மணலூர், அகரம் ஆகிய பகுதிகள் சங்க கால பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மொத்த பகுதிகளிலும் ஆய்வு நடத்திட வேண்டும். இப்போது கண்டுபிடுத்துள்ளவற்றின் தொடக்கமும் முடிவும் அறியப்பட வேண்டும். கீழடியில் அடுத்த ஆண்டு இன்னும் விரிவாக தமிழக அரசு அகழாய்வை நடத்திட வேண்டும். ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதனை பல முறை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியும் கூட ஏன் வெளியிட தாமதம் என்பது புரியாத விஷயமாக இருக்கிறது. அகழாய்வு முடிவை வெளியிடுவதோடு ஆதிச்ச நல்லூரில் மாநில அரசு ஆய்வை தொடர மத்திய அரசின் அனுமதியை பெற்று செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வறிக்கையை முடித்து வெளியிடக்கூடிய சூழலையும் கால அவகாசத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும். கீழடி, ஆதிச்சநல்லூர் என அனைத்து அறிக்கைகள் வெளிக் கொணரப்பட வேண்டும். அப்போதுதான் முழு நாகரீகத்தின் அடையாளம் வெளிப்படும் என்றார்.