நரந்தம் (Malabar Lemon Grass)

நரந்தை மலர், யானைப்புல் என்றெல்லாம் சொல்லப்படும் இந்தப்புல் மலர் வரிசையில் சேர்ந்தது வியப்பே. கவரிமான் விரும்பி மேயும். இதனை மணத்துக்காக பெண்கள் கூந்தலில் பூசிக்கொள்வர். அரசன் அதியமான் தன் கைகளிலெல்லாம் பூசிக்கொண்டு மணந்தான் என்று இலக்கியம் சொல்கிறது. நரந்தம் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பாடப்பட்டுள்ளது. ஏங்க எப்படி இப்படி மணக்குரீங்க? அதுவா நரந்தம் பூசிக்கொண்டு வந்தேன், அதான். நரந்தமா? நீங்க ‘நறை’ பூசிக்கிரீங்க; இவரு ‘அகில்’ பூசிக்கொண்டிருக்கிறார்; அவரு ‘சந்தனம்’ பூசிக்கிட்டிருக்கிறாரு. நீங்க எல்லாம் இப்படி ஆளுக்கொன்று பூசிக்கொண்டு வரும்போது நானும் இதேபோல வித்தியாசமா ‘நரந்தம்’ பூசிக்கொண்டுள்ளேன்.

– வே. அரசு பெங்களூரு