பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார். 220 படுக்கைகளை கொண்டுள்ள இந்த மையம் பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்திரப் பிரதேசத்தின் முதல் கோபாஸ் 6800 இயந்திரமும் திறந்துவைக்கப்பட்டது. தனது பிராந்திய சமநிலை கொவிட் பரிசோதனை திட்டத்தை தொடர்வதற்காக இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி குழுவால் (ஐ சி எம் ஆர்) இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பிரதமரின் சுவஸ்தியா சுரக்ஷா திட்டத்தின் கீழ் ரூபாய் 150 கோடியில் இந்த சிறப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ பிரிவுகளை இது தன்னகத்தே
கொண்டுள்ளது. பிரதமரின் சுவஸ்தியா சுரக்ஷா திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வுசெய்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் கனவை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார்.