பேசு தமிழா பேசு 2020

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் பேசு தமிழா பேசு 2020 சர்வதேச தமிழ் பேச்சுப் போட்டி. வணக்கம் மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தும் நான்காவது சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி “பேசு தமிழா பேசு 2020” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் உலகெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலை கழக மாணவர்கள்  கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டுமென்று ஆரி அருஜுனன் வாழ்த்து தெரிவித்தார்.

அதனைப் பற்றி ஆரி அருஜுனன் கூறுகையில். இந்த போட்டியில் 10 தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும். நாம் அனை வரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் நடத்தும் “பேசு தமிழா பேசு 2020” இந்த சர்வதேச போட்டியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி கல்லூரி பல்கலைகழக மாணவர்கள் தமிழை வளர்த்து பரிசினை வெல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதில் கலந்துகொள்ள மாணவர்கள் https://houstontamilchair.org இந்த முகவரியை பயன்படுத்திக் கொள்ளவும். தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் என்றார்.