மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி ஊராட்சி. இந்த ஊரின் அருகேயுள்ளது நரிக்குடி முக்குளம் . சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள்  பிறந்த கிராமம் ஆகும். மருது சகோதரர்களின் தியாகத்தை  போற்றும் வகையில் ,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருதுபாண்டியர் அரசு மருத்துமனை என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டி பெருமை படுத்தியுள்ளது. மேலும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி மருது பாண்டியர் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது. மருது பாண்டியர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசு விடுதலை போராட்ட வீரர் களை கௌரவபடுத்தியுள்ளது . 
 
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில்  மருது சகோதரர்களால்  நிர்மாணிக்கப்பட்ட அன்னச் சத்திரம் உள்ளது. இச்சத்திரத்தின், ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் ,பெரிய மருதுபாண்டியர் அவர்களின் திருவுருவ கற்சிலையுடன் கூடிய கோவில் உள்ளது.இக் கோவிலின் சுவற்றில் ,மானமே உயிர் ! ,தானமே தவம்!! ,  சிவகங்கைச் சீமையை சீருடனும் , பேரும்,புகழுடனும்  அரசாண்ட மாமன்னர் பெரிய மருதுபாண்டியர் திருக்கோவில் ,நரிக்குடி &முக்குளம் , என பெயிண்டிங்கினால் எழுதப்பட்டுள்ளது.இதனை, அழிக்கக்கோரி தனி நபர்  புகார் மனு  வழங்கியுள்ளார். உண்மைக்கு புறம்பாக சர்ச்சைக்குரிய வாசகம் எழுதியிருப் பதாக கூறும் மனுவினை  ஏற்று ,விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அந்த அறிக்கை யில், சுவற்றில் எழுதியுள்ள பெரிய மருதுபாண்டியர் திருக்கோவில்  என்பதை அழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது மருது சகோதர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். இச்செயல், மருது சகோதரர்களை தெய்வமாக வணங்கும் அனைவரின் மனதையும் புண்படுத்தக் கூடியது என்று மருது சேனை நிறுவனர் மற்றும் தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர்  வெளியிட் டுள்ள அறிக்கையில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க  நரிக்குடியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத் திற்கு கரு ஆதிநாராயணத்தேவர் வருகை தந்தார். திருச்சுழி டிஎஸ்பியை நேரில் சந்தித்த அவர் ,சுவற்றில் எழுதியுள்ள வாசகத்தை அழிக்கக்கூடாது என்று மருது சேனை அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தார் .சந்திப்பின்போது, மருது சேனை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உடனிருந்தனர்