சையாரா திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது

மோஹித் சூரி* இயக்கத்தில் உருவான *சையாரா* திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் சூரி இருவரும் மீண்டும் ஒன்றிணைவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருவரும் காலத்தைக் கடந்த காதல் திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்கள். அழுத்தமான காதல் கதையை கொண்ட *சையாரா* திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஒய். ஆர். எஃப் நிறுவனம்  வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமாகும் *அஹான் பாண்டே* மற்றும் அவருடன் அனீத் பட்டா கதாநாயகியாக இணைந்து நடிக்கிறார். *********

*’சையாரா’* என்ற படத்தலைப்பை சார்ந்து மிகப்பெரிய ஆர்வம் நிலவியது மற்றும் படத்தின் டீசர் அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. *சையாரா* என்றால் வெறுமனே ஒரு உடல் என்று பொருள், ஆனால் கவிதைகளில் ஏதோ ஒன்றையோ அல்லது யாரோ ஒருவரைப் பற்றியோ கண்கூசச் செய்யக் கூடிய, வேற்றுலகைச் சார்ந்த ஒன்றைப் பற்றியோ விவரிக்கப் பயன்படுகிறது. நன்கு மிளிரக் கூடிய, தனித்து இருக்கக் கூடிய ஒரு நட்சத்திரம், எப்போதும் வழிகாட்டும் ஒன்றாக விளங்குகிறது. *ஒய். ஆர். எஃப்* , அதன் 50 ஆண்டுகால வரலாற்றில், முக்கியமாக *யாஷ் சோப்ரா* மற்றும் *ஆதித்யா சோப்ரா* இயக்கத்தில் பல காதல் படங்களை இந்திய சினிமாவுக்கு வழங்கியதற்காக ஒய். ஆர். எஃப்* பெயர் பெற்றது. தற்போது சினிமாவில் தனது 20-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கும் *மோஹித் சூரி,* *ஆஷிகி 2* , *மலாங்* , *ஏக் வில்லன்* உள்ளிட்ட சிறந்த காதல் காவியங்களையும் இயக்கியுள்ளார். *சையாரா* ஜூலை 18,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.