அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது

அரசு துறையில் உதவி மக்கள் தொடர்பாளர், அலுவலக ஊழியர், மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியர்ப்வேலை வாங்கித் தருவதாக 12 நபர்களிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்த. ஏமாற்றிய இருவரை சென்னை மாநகர காவல்த்துறையினர் கைது செய்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புகார்தாரர் பாரதி மற்றும் 12 நபர்களுக்கு அரசு மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ராதாகிருஷ்ணன் மற்றும் மோகன்ராஜன் ஆகியோர் அறிமுகம் செய்து கொண்டு தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளாக இருப்பதாகவும் பல நபர்களுக்கு அரசு துறையில் வேலை வாங்கி கொடுத்திருப்பதாக கூறியதை நம்பி பாதிக்கப்பட்ட 12 நபர்களிடம் மொத்தம் ரூ.1கோடியே 66 லட்சத்து 36 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணிநியமான ஆணைகளை கொடுத்து ஏமாற்றியதாக கொடுத்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணையில் எதிரிகள் மோகன்ராஜன், ராதாகிருஷ்ணன், ஆகிய இருவரும் புகார்தாரர் உட்பட 12 நபர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. மேற்கண்ட வழக்கின் விசாரணையில் உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப உத்தரவின் பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா, வழிகாட்டுதலின் பேரில், வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் மோகன்ராஜன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவ்விருவரையும்  நீதிமன்ற உத்தரவின்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவலர்களை ஆணையர் ஆ.அருண் வெகுவாக பாராட்டினார்.