‘சட்டமும் நீதியும்’ தொடரின் வெற்றி விழா

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது: “.என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார். இந்த தொடர்  நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது******

அவருக்கான அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மாதிரி தொடர்ந்து பல படைப்புகளை தயாரிக்க வேண்டும். இந்த குழுவில் எல்லோருமே கடின உழைப்பை தந்துள்ளார்கள். சரவணன் சார் அசத்திவிட்டார். நம்ரிதா எங்கள் அழகி, க்யூட்டான ஹீரோயின், புராஜக்டுக்கான தேவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக செய்துள்ளீர்கள். கேப்டன் பாலாஜி செல்வராஜ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அவர் புரடியூசருக்கான டைரக்டர். 14 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அவர் கடின உழைப்பாளி. இவர்களின் உழைப்புக்கான பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை மக்களிடம் சேர்த்த ZEE5க்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன்  பேசியதாவது… எங்கள் டீம், சரவணன் அண்ணன், இந்த முழு வெப் சீரிஸை, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது தெலுங்கு இந்தியிலும் இது டப்பாகி கொண்டிருக்கிறது. சரவணன் அண்ணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார் நன்றி. நம்ரிதா அருமையாகச் செய்துவிட்டார். ஆர்ட் டைரக்டர் பாவனா இதில் ஒரு செட் கூட செட் எனச் சொல்ல முடியாத படி, அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் பாலாஜியும் நானும்  நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் 14 நாட்களில் மொத்த சீரிஸையும் முடித்துத் தந்தார். அந்தளவு கடினமான உழைப்பாளி. மியூசிக் டைரக்டர் நீங்கள் தந்த இசைக்கு நன்றி. இந்த சீரிஸுற்கு முழுக்காரணமாக இருந்த என் மனைவிக்கு நன்றி. நான் சினிமா ஆசையில் வந்தவன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ZEE5க்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய பத்திரிக்கை ஊடக நண்பர்க்கு நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது… எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது… பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி.