தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்*  பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், இட்லி குண்டான் (இட்லி கடை வைப்பதற்கு) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், அதேபோல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 இலட்சம்* காசோலை வழங்கப்பட்டது.

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். உடன் கழக அவைத்தலைவர் டாக்டர்.வி.இளங்கோவன், கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் , கழக இளைஞர் அணி செயலாளர் வி.விஜய் பிரபாகர் , கழக தலைமை நிலையச் செயலாளர் .ப.பார்த்தசாரதி,Ex:MLA.,, கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., , கழக துணைச் செயலாளர்கள்  எம்.ஆர்.பன்னீர்செல்வம் , SSS.U.சந்திரன், சுபா ரவி,Ex:MLA., , மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.