தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் இயக்குநர்-நடிகர் செல்வராகவன் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி,ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது குற்த்து இயக்குநர் கூறும்போது; ’இயற்கையும் அமைதியும் சூழ்ந்த ஒரு கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்கும் பேரிடர், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகனை தனது மக்களை காப்பாற்ற ஒரு முடிவெடுக்கச் செய்கிறது. அவர் எடுக்கும் அந்த முடிவே, அவனை அக்கிராம மக்களின் தெய்வமாக மாற்றுகிறது. அதனால்தான் இப்படத்திற்கு ‘மனிதன் தெய்வமாகலாம்’ எனப் பெயரிட்டுள்ளோம்.”******
தயாரிப்பாளர் குறிப்பு
“எங்கள் படத்திற்கான தலைப்பை ‘மனிதன் தெய்வமாகலாம்’ என அறிமுகப்படுத்திய தனுஷ் சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய அன்பான செயல் எங்கள் பயணத்திற்கு பேருந்தூண்டுகோல் மற்றும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படம் நம்பிக்கையை, தியாகத்தையும், ஒரு நிலமும் அதன் மக்களும் கொண்ட ஆன்மீக பந்தத்தையும் பேசுகிறது. விரைவில் மேலும் பல விபரங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்போம். முதல் நாள் முதல் எங்களோடு இருந்த நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.”
— விஜயா சதீஷ், தயாரிப்பாளர்
நடிகர்கள்; – செல்வராகவன்- குஷி ரவி- வை. ஜி. மகேந்திரன்- மைம் கோபி-கௌசல்யா- சதீஷ்- லிர்திகா தொழில்நுட்பக் கலைஞர்கள்- தயாரிப்பாளர்: விஜயா சதீஷ்- இயக்குநர்: டென்னிஸ் மஞ்சுநாத்- ஒளிப்பதிவாளர்: ரவி வர்மா கே
– தொகுப்பாளர்: தீபக் எஸ்- இசையமைப்பாளர்: ஏ. கே. பிரியன்- கலை இயக்கம்: பாக்கியராஜ்- சண்டை இயக்கம்: மான்ஸ்டர் முகேஷ்- நிறைவேற்று தயாரிப்பாளர்: தேனி தமிழன்- தயாரிப்பு செயலாளர்: எம். எஸ். லோகநாதன்- நடிகர் தேர்வாளர்: ஸ்வப்னா ராஜேஸ்வரி- உடை அலங்காரம்: ஏ. கதிரவான்- விளம்பர வடிவமைப்பு: பவன் ரெடாட்- நிலைப்படங்கள்: ஜி. கே.- மேக்கப்: ஏ. பி. முகம்மது- நடன இயக்கம்: அஜர்- பி.ஆர்.ஓ: ரேகா
தலைப்பு வெளியீட்டுக்குப் பிறகு, படக்குழு விரைவில் படத்தின் முதல்-நோக்கு போஸ்டர், டீசர் மற்றும் வெளியீட்டு திட்ட விவரங்களை அறிவிக்க உள்ளது.
வ்யோம் என்டர்டெயின்மென்ட் பற்றி; சிறந்த கதை சொல்லும் திறனை முன்வைத்து, தரமான இந்தியச் சினிமாவை உருவாக்கும் நோக்கத்தில் இயங்கும் நிறுவனம் தான் வ்யோம் என்டர்டெயின்மென்ட். புதிய குரல்களையும் தனித்துவமிக்க படைப்புக்களையும் ஊக்குவிக்கும் உறுதிப்பாட்டுடன் முன்னேறி வருகிறது.ஊடக தொடர்புகளுக்கு, பேட்டிகள் மற்றும் விளம்பரத் தகவல்களுக்கு:
பி.ஆர்.ஓ: ரேகா