சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம்

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சிநடைபெற்றது. மண்டல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ். விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தக் குழுராயலா டவர்ஸ் வளாகத்தையும் அருகிலுள்ள பேருந்து நிலையப் பகுதியையும் சுத்தம்செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. தூய்மைப்படுத்தும் பணியைத் தொடர்ந்து, தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிப்பதில் குடிமக்களின் தீவிர பங்கேற்பு குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊழியர்களால் மனிதச் சங்கிலிஅமைக்கப்பட்டது. பின்னர் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ். விஜயகுமார் மரக்கன்று நட்டார். இதில் கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவைநோக்கி செல்லும் தேசிய பணி மற்றும் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கைநோக்கிய பயணமாகும்.