பால், தயிர் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க கலந்தாய்வு கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு..மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை நந்தனம்ஆவின் இல்லத்தில் 31 /08/ 2023 அன்று மாலை 3:30 மணி அளவில் விற்பனைப் பிரிவுக்கான ஆய்வு கூட்டம்நடைபெற்றது. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் சென்னை மற்றும் பிற மாவட்ட ஒன்றியங்களில்உள்ள விற்பனைப் பிரிவு மேலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

 சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். மாவட்ட ஒன்றியங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் உபபொருட்களின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாடுமுழுவதும் சந்தைப்படுத்த ஆலோசனை வழங்கினார். மேலும் சந்தையில் நுகர்வோர் விரும்பும் பொருட்கள்குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்திட அறிவுறுத்தினார்.

 தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஆவின் பாலகங்கள் அமைப்பதற்கு பாலக வடிவமைப்பு வழங்கி தொழில்முனைவோரை ஊக்குவித்து ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் பால் உபபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை ஆய்வு செய்துதரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைத்திட வழிவகை செய்யுமாறு கூறினார்.

 இவ்வாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் ..., அவர்கள், விற்பனைப் பிரிவு (Marketing) அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.