பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில்மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனானமாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்குதல், கொள்முதல்செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடுகள்வாங்குவதற்கான கடன் மனுக்கள் தயாரித்தல். பால் கொள்முதல் அதிகரித்தல், சங்கங்கள் இல்லாதகிராமங்களில் புதிய சங்கங்கள் உருவாக்குதல், சங்க உறுப்பினர்களுக்கு 10 தினங்களில் பால் பணம்பட்டுவாடா நிலுவையின்றி செலுத்துதல் ஆகியவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.20% புரதச் சத்துள்ள கால்நடைத் தீவனம் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சங்கங்களின் தணிக்கைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது. மின்சிக்கன நடவடிக்கையின் மூலம் டிசம்பர் மாதம் 2023 15.06% சேமிக்கப்பட்டு 48 இலட்சம்சேமிக்கப்பட்டுள்ளது.   மேலும், ஆவினில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு, செலவை குறைக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்

  இக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத்..., மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின்  கொள்முதல் பிரிவு, நிருவாகப் பிரிவு, கணக்குப்பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு,  பொறியியல் பிரிவு, கட்டுமானப்பிரிவு, தர உறுதி, அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் உப பொருட்கள் பண்ணை, மாதவரம் பால் பண்ணை,  சோழிங்கநல்லூர் பால் பண்ணை, மற்றும் இதர பிரிவுகளை சார்ந்த உயர்அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.