ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா – விமர்சனம்

தயாரிப்பு : அர்த்தநாரீஸ்வரர் மீடியா ஒர்க்ஸ்

நடிகர் : ஜி சிவா

இயக்கம் : ஜி. சிவா

மதிப்பீடு : 3.5 / 5.

விருகம்எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.

வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றிஅவருடைய கோணத்தில் கதை நகர்கிறது.

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றினாலும்.. எதிரில் இருக்கும் கதாபாத்திரத்தின் கை, கால்ஆகியவற்றை காண்பிப்பதும், காதலியை காண்பிப்பதும், காதலியுடன் பாட்டு பாடுவதும் வித்தியாசமானமுயற்சியை கையாண்டு இருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிவா

கதையென்று பார்த்தால் நாயகன் ஒரு பெண் மீது காதல் கொள்கிறார். அந்தப் பெண் இவரை ஏமாற்றிமற்றொருவருடன் தொடர்பில் இருக்கிறார். இதனால் ஆத்திரமடையும் நாயகன், காதலியையும் அவரதுகாதலனையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார். இதைத்தொடர்ந்து தான் தவறு செய்து விட்டதாகதன்னுடைய இளைய சகோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு, சட்டத்திற்கு பயந்துதலைமறைவு வாழ்க்கையை வாழ தொடங்குகிறார். ஒரு புள்ளியில் தன்னுடைய தோற்றமும் தன் இளையசகோதரனின் தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதால் குற்ற வழக்குகளில் அவனை சிக்க வைத்து விட்டு, தான்தப்பிக்க முடியும் என்று நினைக்கிறான். இதனை தம்பியிடமும் சொல்கிறான். அதிர்ச்சி அடைந்த தம்பிஅண்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா? இல்லையா? என்பதும், உச்சகட்ட காட்சியில் என்னநடந்தது? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.

ஒரே ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநரான ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இரட்டைவேடத்தில் அசத்துகிறார்.காதலனாக,நடிகராக,டான்சாராக இப்படி பல பரிமாணங்களில் மிளிர்கிறார்இயக்குனர் சிவா

படத்தின் எடிட்டர் அரவிந்த் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.ஓகி ரெட்டி,௮ருண் சுசிஆகிய இருகேமராமேன்களும் படத்திற்கு தேவையான காட்சிகளைமிக அழகாக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா  பட டயலாக் மட்டுமல்லபடமும் கூட..அவசியம் பார்க்க வேண்டியபடமும் கூட..வித்தியாசமான புது முயற்சி