இலங்கை பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு கனடாவில் வரவேற்பளித்த ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர்

கனடிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்திய ‘தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு வந்திருக்கும் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தை ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் அவர்களது கலைக் கூடத்தின் இன்று இரவு 03-09-2023 Q நடத்தினர்.
மேற்படி நிகழ்வுககு ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தின் நிறுவனர் ஜெயச்சந்திரன் மாஸ்டர் தலைமை தாங்கினார். கனடா உதயன் லோகேந்திரலிங்கம் அவர்ளும் அங்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்ச்சியானது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த ஒன்றாக நடைபெற்றது. அதற்கு காரணம் வன்னி மண்ணில் மறைந்த பாடகர் சாந்தன் அவர்கள் எமது விடுதலைப்போராட்டம் சார்ந்த பல பாடல்களை உணர்வோடு பாடியவர் என்ற வகையில் அவருக்கு விடுதலைப்புலிகளின் தலைமை அவர் மீது வைத்திருந்த அளவற்ற மரியாதை மதிப்பு போன்றவற்றை அவரது புதல்வர் விபரமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மறைந்த பாடகர் சாந்தன் அவர்கள் உடல் குன்றியிருந்த காலத்தில் அவருக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டி பல அமைப்புக்கள் தனி நபர்கள் ஆகியோரிடம் உதவிகளை வேண்டி விடுக்கப்பெற்ற வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பெற்றுவிட. அதனைத் தொடர்ந்து ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் வேறு சில அன்பர்களோடு இணைந்து நிதி சேகரிப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தி 22,000 கனடிய டாலர்களை சேகரித்து அனுப்பியமை மற்றும் அவருக்கு கடைசி நேரத்தில் போதியளவு கிடைத்திருந்தாலும் அவை கால தாமதமாக  பாடகர் சாந்தன்  அவர்கள் குடும்பத்தினர் கைகளுக்கு போய்ச் சேர  காப்பாற்ற முடியாமல் போனது போன்ற விடயங்கள் அங்கு பகிரப்பெற்றன.
அங்கு பாடகர் கோகுலன் தனது மிகவும் உருக்கமான உரையொன்றை ஆற்றினார். அந்த உரையானது அங்கு கூடியிருந்த அனைவரதும் இதயங்களை ஊசிகளினால் குத்தியதைப் போன்ற உணர்வே ஏற்பட்டது.
அந்த உரையில் மறைந்த சாந்தன் அவர்களுக்கு கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கப்பெற்ற சிகிச்சையின் பின்னர் அவர் குடும்பத்திடமிருந்து அறிவிடப்பட்ட அதிகளவு கட்டணம் தொடர்பாகவும் கோகுலன் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
இவ்வாறான தாய் மண்ணுக்காக உணர்வைத்தூண்டும் பாடல்களை தனது உரத்த குரலால் பற்று வைத்தும் பாடியும அவர்கள் வன்னி மண்ணில் கழித்த நாட்கள் அங்கு நினைவு கூறப்பட்டன என்றால் அது மிகையாகாது.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் அங்கு மேலும் பலரும் உரையாற்றினார்கள்