மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை to கிழக்கு கடற்கரைச் சாலை கடலூர் கிராமம் வரைமாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ளஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 250 க்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலைதுறையினர் அடியோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்தும் மரங்களை வேரோடு பிடிங்கி மாற்று இடம் பள்ளி கூடம், குளம், பூங்காக்கள், நீர் பிடிப்புபகுதியில் நட வேண்டியும்செங்கற்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத்தாயகம் சார்பாக வெட்டப்பட்டமரங்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவத்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று(02.09.2023) கீரல் வாடியில் நடைபெற்றது.

பசுமைத்தாயகம் செங்கற்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் நா.சுரேஷ் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் பசுமைத் தாயகம், மாநிலத் துணைச் செயலாளர் .நா.கண்ணன், செங்கற்பட்டு தெற்கு மாவட்டபசுமைத் தாயகம் ஆலோசகர் கி.குமரவேல் மற்றும் மோகனரங்கம் , அன்பு, வினோத்குமார், கிளியா நகர் சுரேஷ், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.