செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு..அருண்ராஜ், ..., அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (12.02.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 385 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், தென்னிந்திய அளவில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிமற்றும் விளையாட்டு போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது) திரு.அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.நரேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சாகிதா பர்வின், மாவட்டவழங்கல் அலுவலர் திருமதி.பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்திரு.வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.