செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (04.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர்உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 212  மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி அலகு, 2020–ஆம் ஆண்டில் கொடிநாள் வசூல்           ரூ.3 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை வசூல் புரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 6 மாவட்ட அலுவலுர்களுக்கு 30 கிராம்வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்கள் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ்கள் மற்றும்ரூ.5 இலட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த 6 மாவட்ட அலுவலர்களுக்கு 30 கிராம் வெள்ளிப்பதக்கங்களை மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், ..., மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திருமதி.லலிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.பேபி இந்திரா, மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர் திரு..அசோக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்திரு.சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல அலுவலர் திரு.வெற்றிகுமார், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.