செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா  தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள. மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் வாரியத்தில் பதிவு பெற்ற விபத்தில் மரணமடைந்த அமைப்புசாரா ஓட்டுநரின் மனைவி ஷீலா என்பவருக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.2.05 இலட்சத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள். மேலும், தமிழ்நாட. அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா ரூ.1 இலட்சத்துடன் கூடிய ஆட்டோ ரிக் ஷாவினை ஆட்சியர் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  7 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, பிரெய்லி கைகடிகாரம், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட ரூ.1.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஒவ்வொரு மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில், குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா வேண்டியும், பட்டா பெயர் மாற்றம் செய்ய கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். இதில், ஒரு சில கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட. குறைதீர் கூட்டத்திலேயே  தீர்வு காணப்பட்டது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயணசர்மா,வ்மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ்குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலாயுதம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.