செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறிப்பாக, பட்டா வேண்டியும், கலைஞர் கனவு இல்லம், மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள இடங்களில் வீடுகள் வேண்டியும் அதிகளவில் மனுக்கள் வரப்பெற்றது. மேலும், குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டி பல மனுக்கள் வரப்பெற்றது. குடும்ப வன்முறை, மற்றும் இட ஆக்கிரமிப்பு போன்ற குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் அதிகளவில் மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை, மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து உடனடியாக தீர்வு காணுமாறு காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடித்த 5 நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.6000 மதிப்புள்ள மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் குறைதீர் கூட்டத்தில் வரப்பெற்ற 361 மனுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது(பொ)) வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், உதவி இயக்குநர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது.
