பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளமயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளைஅகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துமயான பூமிகளிலும் தீவிரத் தூய்மைப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து தீவிரமாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து,  (20.01.2024) கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், ..., பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கஸ்தூரி பாய் நகர் இரயில்வே வாகன நிறுத்தும் இடங்கள், மாநகராட்சி மியாவாக்கி பூங்கா உள்ளிட்ட இடங்களில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணியில்ஈடுபட்டார்.

பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-124, புனித மேரீஸ் கிறிஸ்தவக் கல்லறையில் தீவிரத் தூய்மைப்பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகியவற்றில் மாநகராட்சியின் சார்பில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்களும் இந்தத் தூய்மைப் பணிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், பொது இடங்களில்பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் குப்பை கொட்டுதல், கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றைமுற்றிலும் தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.

மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மாநகராட்சிக்குட்பட்ட மயான பூமிகளில்காணப்படும் குப்பைகள் மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை அவ்வப்பொழுது தூய்மைப்பணியாளர்களுடன் இணைந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து  (20.01.2024) தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துமயானபூமிகளிலும் காணப்படும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றைஅகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், தொண்டு நிறுவனங்களும்இவ்வாறான பணிகளில் ஈடுபட தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள்அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டல சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தங்களின்பங்களிப்பினை அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்  கி. விமலா, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உர்பேசர் நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.