கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் மற்றும் கடற்கரையை மேம்படுத்துவதற்கானபணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா ராஜன் அவர்கள், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.ஜே.எபினேசர் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, ..., அவர்கள், சென்னைப் பெருநகர்வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, ..., அவர்கள், மாநகராட்சி நகரமைப்பு குழுத்தலைவர் திரு.இளைய அருணா, மண்டலக் குழுத் தலைவர் திரு.நேதாஜி.யூ.கணேசன், சி எம் டி தலைமைத்திட்ட அமைப்பாளர் திரு.பாலசுப்பிரமணியன், கண்காணிப்பு பொறியாளர் (பொ) திரு.பாலமுருகன், மாமன்றஉறுப்பினர்கள் திருமதி.தேவி, திருமதி.குமாரி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இன்று (15.3.2024) சென்னை, கோயம்பேடு, மலர் அங்காடியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்திரு..எம்.வி. பிரபாகர ராஜா அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர்திருமதி.காகர்லா உஷா, ..., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்திரு.அன்சுல் மிஸ்ரா, ..., அவர்கள் ஆகியோர் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றை (Fountain) திறந்து வைத்து, 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்இந்நிகழ்ச்சியில்கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு. இந்துமதி, கண்காணிப்புபொறியாளர் திரு.ராஜ மகேஷ்குமார், கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் திரு.ராமையா, திரு.ஜெயவீரன், திரு.மாரிமுத்து, மாமன்ற உறுப்பினர் திரு.லோகு ஆகியோர் கலந்து கொண்டனர்.