ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் திட்டம், அதற்கு திமுகவினர் தங்களது கட்சிசின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல். திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் திமுகவினர் நாசம் செய்து விட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகி இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி*

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோஏற்பாட்டில் துறைமுகம் ராஜாஜி சாலையில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நிதி உதவிவழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்துஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு  நிதி உதவியினை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் வடசென்னைதெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த தின விழா தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது. கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணையை ஏற்றுமக்களுக்கு பயன்படுமாறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, உணவு வணங்குவது உள்ளிட்டவை தமிழகமுழுவதும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது வீரத்தை பறைசாற்றுகின்ற ஒரு விழா. 1000,2000 ஆண்டாக நடைபெற்றுவருகிறது.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.அவர்கள்கொடுத்த அழுத்தத்தில் தான் சாதகமாக தீர்ப்பு வந்தது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் உத்தரவின் பேரில், அரசு விழா நடக்க வேண்டும் என்பதற்காகமெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை அடித்து விரட்டினர்.

இதனால் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லுவது நியாமில்லை. இன்றைக்கு திமுகவினர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு முதல்வரின் அப்பா பெயரை சூட்டுகின்றனர். தமிழகத்தில் வீரத்தை பறைசாற்ற பல்வேறு மன்னர்களும் வீரர்களும் இருக்கும் போது திமுக தலைவரின் பெயர்எதற்கு என கேள்வி எழுப்பினார். அரசு சார்பில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் இன்றைக்கு கலைஞரின் பெயர் தான் சூட்டப்படுகிறது

சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு என்பது கட்சி விழாவாக நடத்தப்பட்டதே தவிர ஒரு பொது விழாவாகநடத்தப்படவில்லை.    கிளாம்பாக்க பேருந்து நிலையம் 80 ஏக்கர் பரப்பளவில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டம்.திமுகவினர்அதன் வடிவமைப்பை  மாற்றிவிட்டனர் மேலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு சரிவர அறிவிக்கப்பட்டு இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் திமுகவினர் அவசரப்பட்டதால் இந்த திட்டம்மக்களுக்கு சிரமத்தை தருவதாக மாறி உள்ளது. திமுகவின் ஆட்சியில் புதிதாக பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்குபோதிய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை மற்றும் காலி  பணியிடங்களை நிரப்பவுமில்லை என குற்றம் சாட்டினர்.