கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம்.

தமிழனுக்கு கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் விக்டோரியா ஸ்போர்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் தலைமையில் சென்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இச்சிறப்பு மிகு நிகழ்வில் நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சட்ட ஆலோசகரும் ,சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தோழர் . க .தேசிங் MA ML அவர்கள் ,லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் க.தனபால் .ஆசான்கள் த.தயாநிதி. M.கார்த்திகேயன் M.முரளிகிருஷ்னன். த.கார்த்திக். மற்றும் அஸ்வின் கார்த்திக், சுவேதா,பிரீத்தி, அகுலபணிராஜ் , விவேக் ,சுரேஷ், பிரபாகரன், கருணாகரன், பிரித்திவி ராஜ், அரவிந்த், வாசன் ,மற்றும் ஆசான்கள் கலந்து கொண்டு போட்டியை நடத்தினர். தமிழகத்திலிருந்து 43 வீரர் வீராங்கனை கள் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி பெற்றனர்.23 முதல் இடமும் 14 இரண்டாம் இடமும் ,6 மூன்றாம் இடமும் பெற்றனர்.
6-மாநிலங்களில் இருந்து பங்கு பெற்ற இப்போட்டியில் தமிழகம் சாதனை படைத்தது.