காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை எண்.314 உள்(காவல்.8) துறை நாள்.24.06.2025-னை வெளியிட்டார். முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும்வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டுசெல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கியகலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றது.3தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையில்தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத்திரையிடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. 2023-ஆம்ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம்/ நகரம்/ பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல்நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, காவல்துறைஇயக்குநர் /காவல் படைத் தலைவர் அவர்களால் மாண்புமிகுமுதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட்டன.தனது சிறப்பு உரையில், காவல்துறை இயக்குநர்/காவல்படைத் தலைவர் அவர்கள் இந்த நாளின் முக்கியத்துவத்தைஅடிக்கோடிட்டுக் காட்டினார். காவல் படையினர் கடமை, மரியாதை மற்றும் சேவையின் இலட்சியங்களுக்கு தங்களைமீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், பயம் மற்றும்பாரபட்சம் இல்லாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும், ஒழுக்கம்மற்றும் நேர்மையைப் பேண வேண்டும், பொதுமக்களுக்குஇரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள்kw;Wk; fhty;Jiw jiytu;> tlf;F kz;lyk; அவர்கள் சிறப்பு உரைநிகழ்த்தினர். அதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் மற்றும்பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.காவல் தினக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடுகாவல்துறையின் வரலாற்று பாரம்பரியத்தைஎடுத்துக்காட்டுகின்றன. மேலும், பொது சேவை மற்றும் நீதிக்கானஅதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.