பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றவிவாதத்தின் போது பாஜகஉறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின்உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிகஅருவருப்பான வார்த்தைகளை ப்பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம்எம் பி மீதுமட்டுமல்ல ஒத்துமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ள வெறுப்புரையாகும்.

ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு  பாஜகவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லைஎன்பதை இந்த பேச்சு எடுத்துகாட்டியுள்ளது.

பிதுரியின் உரை ஆச்சரியத்தைத் தரவில்லை.  வி டி சாவர்க்கரைப்பின்பற்றுபவர்களின்மனநிலையின்இப்படியே இருக்கும் என்பதற்கு இந்த உரை மற்றொருஎடுத்துக்காட்டாகும். வெறுப்புணர்வைத் தூண்டும் எம்பி மீது இது வரை பாஜக தலைமையோ மக்களவைசபாநாயகரோ நடவடிக்கைஎடுக்காததும் ஆச்சரியத்தைத் தரவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன்சவுத்திரி உள்ளிட்டோர்மீது பாய்ந்த நடவடிக்கை ரமேஷ் பிதூரி மீது ஏன் பாயவில்லை.

புதிய நாடாளுமன்ற கட்டத்திற்குள் பாஜகவினர் இனி எவ்வாறு தரம் தாழ்ந்து நடப்பார்கள்என்பதற்கு இதுதொடக்கப்புள்ளியோ என்று எண்ண வேண்டியுள்ளது. ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் மேலும் கடுமையாகக் கண்டனம்தெரிவிக்க வேண்டும்.