வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் வழிபடுவதற்கு இரண்டு கோயில்கள், ஒரு பள்ளிவாசல் மற்றும்ஒரு தேவாலயம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலங்கள் கோவிட் பெருந்தோற்றின் போது மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு இரண்டு இந்து கோயில்களும், தேவாலயமும் மீண்டும் திறக்கப்பட்டு அதில்வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மட்டும் பாதுகாப்பு என்ற காரணத்தால் இன்றுவரை திறக்கப்படாமல்உள்ளது. இதுகுறித்து பலமுறை சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இவ்விஷயத்தில் எந்தவிதமேல் நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிவாசல் மூடிய நிலையிலேயே உள்ளது.

முஸ்லிம்களின் பண்டிகை நாளான ரம்ஜான், பக்ரீத் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கும்பள்ளிவாசலைத் திறக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவருகிறது. முஸ்லிம் சிறைவாசிகளை தங்களது சிறைஅறைகளிலேயே தொழுகையை நிறைவேற்றும்படி சிறை நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.

சுமார் 40 முஸ்லிம் சிறைவாசிகள் உள்ள வேலூர் சிறையில் பள்ளிவாசல் மட்டும் வழிபாட்டிற்காகத் திறக்காமல்இருப்பது அச்சிறையின் அதிகாரிகளின் உள்நோக்கம் கொண்ட ஒருதலைபட்ச  செயலாகும்.

எனவே, தமிழக அரசு வேலூர் சிறையில் உள்ள பள்ளிவாசலை உடனே திறந்து அதில் முஸ்லிம் சிறைவாசிகள்தொழுகையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில்வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.