அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்டஅதிகாரிகள் குழு அமைச்சர் பொன்முடி வீட்டில்சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும்அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையின் வாயிலாக மிரட்டிஆட்சியாளர்களைப் பணியவைக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு  முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி சர்ச்சையைஉண்டாக்கிய ஒன்றிய அரசு தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடியை வழங்க முயற்சிசெய்கிறது.

தொடர்ச்சியாக அமலாக்கத் துறையை கை பாவையாக மாற்றி பாஜகவின் இருக்கும் இந்தசெயல்கண்டிக்கத்தக்கது.

2007ல் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேட்டிற்காக 16 ஆண்டுகள் கழித்து இன்று பெங்களூருவில்எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் நடைபெறும் தினத்தில் அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்திவருவது கவனிக்கத்தக்கது.  

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதும் அதில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான தளபதி முகஸ்டாலின் பெரும் பங்காற்றுவதும் பாஜகவை நிலைகுலைய வைத்துள்ளது என்பதின் வெளிப்பாடாகவே இன்றைய அமலாக்கத்துறையின் சோதனையைக் கருத வேண்டியுள்ளது.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்சோதனை நடத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும்கூட்டத்திற்கு முன்னதாக பொன்முடிவீட்டில் சோதனை நடத்தி இருப்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது. எதிர்க்கட்சிகள்ஒருங்கிணைவதை பாஜகவால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் இதன் வாயிலாகத் தெளிவுபடுகிறது.