ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதித்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. கூலி வேலைக்குச் செல்லும் தச்சுத் தொழில் செய்பவரின் மகளான நந்தினி, சக மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

தேபோல, தமிழ் மொழிப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ள ராணிப்பேட்டை மாணவி லக்ஷயா-க்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்.

அதேநேரம், தேர்ச்சி பெறாதவர்கள் மனம்தளர்ந்துவிடக்கூடாது. தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சித்தால், வெற்றி உங்கள் வசம் வந்தே தீரும். வருகிற ஜூன் மாதத்தில்  நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்விக்குச் செல்வதை உறுதி செய்யவும், உயர்கல்வி தடைபடும் சூழலில் இருப்போருக்கு உதவவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கமல் ஹாசன்
  தலைவர்,
  மக்கள் நீதி மய்யம்.