மொழியால் நாம் சண்டை போட்டுக்க வேண்டியதில்லை” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

 மாணிக் ஜெய்.என். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் நாயகனாக எல்.என்.டி.  எத்திஷ் நடிக்கிறார்.  தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார், இயக்குனர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்.. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: “மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை. மொழியை மீறின ஒரு உணர்வுதான் கலை. இந்த கலைக்கு அதுவும் குறிப்பாக திரைப்படக் கலைக்கு மொழி வந்து ஒரு இடைஞ்சலாகவோ, ஒரு தடங்கலாகவோ, ஒரு பிரச்சனையாகவோ இருக்கக்கூடாது..தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நான்கு மொழிப் படங்களும் எடுத்த ஊர் தான் இந்த சென்னை.. சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு செட்டுல கன்னடத்துல பேசுவாங்க. அதே செட்டு காலியாகவும். அதுக்குள்ள தமிழ் நடிகர்கள் போய் அதே படத்துல நடிப்பாங்க. இங்க ராமராவ் அங்க எம்ஜியாரு, இந்த பக்கம் சிவாஜி சார், இந்த பக்கம் ராஜ்குமார், அந்தபக்கம் விஷ்ணுவர்தன். எல்லாரும் ஒன்னா கூடி கும்மி அடிச்சு எவ்வளவு அழகா இருந்த நம்ம சினிமா இன்னிக்கு ஒரு கேரவனுக்குள்ள போய் ஒழிஞ்சிடுச்சு. ஒரு கேரவனோட. மொதல்ல அதுல இருந்து மீட்டெடுப்போம். கேரவனுக்குள் இருந்து இந்த சினிமாவை மீட்டெடுத்தாலே நமக்கு பெரிய சக்சஸ் வந்துரும். என்றார்.*******

மேலும் அவர் பேசியதாவது: “நான் ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது கன்னட திரையுலகின் ஐம்பதாவது ஆண்டுவிழா நடைபெற்றபோது என்னையும், என்னுடைய நண்பர் இயக்குனர் ராஜா ரவியையும் அனுப்பி வெச்சாங்க.. அந்த நிகழ்வில் ராஜ்குமார் சார் வர்றாரு. அப்போதைய முதல்வர், ராமகிருஷ்ண ஹெக்டே, சௌகார் ஜானகி அம்மா. வாணிஸ்ரீ, ஆர்த்தி, விஷ்ணுவர்தன்,  அதோட சேர்த்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாரும் மேடையில இருக்காங்க. அங்க இந்த மொழி பிரச்சனை வரும்போது எப்படி அத கையான்டாங்க அப்படின்னு நான் என் கண்ணால் பாத்தேன். சௌகார் ஜானகி அழகா கன்னடத்துல ஆரம்பிச்சு தமிழ்ல பேச ஆரம்பிச்சாங்க.. உடனே. கன்னடத்தில் பேசுங்க என கீழே இருந்து ஒரு சவுண்ட் விட்டாங்க. அவங்க பேச்சை நிறுத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி. சரோஜா தேவி பேசி முடிக்கும்போது எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது எனக்கு தமிழ் சினிமா தான் அப்படின்னு சொன்னாங்க. திரும்பவும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க.. இது வந்து மொழியை எதற்கு பயன்படுத்துறோம். எந்த உணர்வை தூண்டுவதற்கும் மொழியை பயன்படுத்துகிறோம் என்பது தான்… அந்த இடத்துல பெரிய ரகளை ஆயிடுச்சி. அந்த உணர்வை தூண்டி விட்டுட்டாங்க ஜனங்க. அதன்பிறகு. ராஜ்குமார் சார் வந்து எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.

எனக்கு உங்களுக்கு ரஜினி சார். நிறைய பேருக்கு ரஜினி சார பிடிக்கும். சில பேருக்கு புடிக்காது. என்னை வியக்க வைத்த ஒரு மனிதர் அவர்.. அப்போ நான் பெரிய ரஜினி சார் ரசிகர் இல்ல. ஆனா அந்த நிகழ்வுல. ரஜினி சார் அன்னைக்கு பேசின ஒரு பேச்சு இருக்கு பாருங்க.. அற்புதமான பேச்சு.. அதை அவரே ஞாபகம் வச்சுருக்காரான்னு தெரியாது எனக்கு.. அப்போ. கன்னடத்துல பேசுனாரு.. கன்னடத்துல பேசும்போது அவர், இது தவறு. இதோ.. ராஜ்குமார் நான் நடிக ஆசைப்பட்ட சமயத்தில் என்னை கூப்பிட்டு டேய் நீ எல்லாம் கருப்பா இருக்க. நீயெல்லாம் நடிக்கும் நடிகனாக முடியாது. போடா வேற எதாச்சும் வேலைய பாரு என்று துரத்திவிட்டார்.. ஆனா என்னை கூப்பிட்டு நடிக்க வச்ச ஒரே ஆளு பாலச்சந்தர் சார் தான்.. அப்படின்னு சொன்னதும்  எல்லாம் அமைதியா. ஆயிட்டாங்க. மொழி என்பது. நம்ம நினைக்கிறதை அடுத்தவங்களுக்கு சொல்ற ஒரு கருவி தான்னு சொன்னார்..  

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்* தயாரிப்பு  ; ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் / மாணிக் ஜெய்.N  இயக்கம் ; மாணிக் ஜெய், N ஒளிப்பதிவு ; வினோத் படத்தொகுப்பு ; நவீன்  இசை ; விக்னேஷ்ராஜா ஸ்டண்ட் ; synt சூரி மக்கள் தொடர்பு ; A.ஜான்