வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” பதாகை

 மிஸ்ரி எண்டர்பிரைசஸ் செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பில் அர்ஜூன் நடிப்பில்  “ஜெய்ஹிந்த்” மற்றும்  “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ரமேஷ் பாரதி இயக்கத்தில் நகைசுவை பேய் படமாக உருவாகியுள்ள திரைப்படம்  “ரஜினி கேங்”.  இப்படத்தின் புதுமையான பதாகை ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பொருளாதாரம்,  விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,  அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்,  அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் ரஜினி கிஷன், திவிகா,  மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது. *******

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் டைட்டில்  டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின்  படப்பை,  மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தொழில் நுட்ப குழு இயக்கம் : M. ரமேஷ் பாரதிஇசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட்எடிட்டிங் : R K . வினோத் கண்ணா  ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார்  மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)