கவிஞர் தமிழ்ஒளி சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டுகள் – முத்தரசன்

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு  தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவுசிலை அமைக்கப்படும் மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம்வைப்பு தொகையாக வைக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அறிவித்திருப்பதுசமத்துவக் கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் படைப்பாளர்களுக்கு ஊக்கமூட்டும்செயலாகும்.

நாட்டுக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட முன்னோர்களை மறவாமல் நினைவு கூர்ந்து, நினைவுச்சின்னம் அமைத்து மரியாதை செலுத்துவது வேர்களை மறக்காத விழுதுகளின் நன்றியாக அமைந்துள்ளது.

கவிஞர் தமிழ்ஒளி உழைப்பு  சுரண்டல், ஏகாதிபத்திய ஆதிக்கம், சாதி, மத வெறி செயல்கள், மூடப்பழக்கவழங்கங்களுக்கு எதிராக எரி சர நடையில் கவிதைகள் படைத்தவர். தாமரை, ஜனசக்தி பத்திரிக்கைகளில்வெளியான இவரது கவிதைகள் முற்போக்கு சக்திகளின் பெரு முழக்கமாக அமைந்ததை வரலாறு பதிவுசெய்துள்ளது.

புரட்சிக் கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை அமைத்து, இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஊக்கமூட்டும் பரிசுதிட்டங்களையும் அறிவித்த முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுநன்றி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.