“என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” -பா இரஞ்சித்

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டுவானம் கலைத் திருவிழா” நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், “சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்க பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணரவேண்டும். என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” என்று விமர்சித்தார்.********

இயக்குனர் ஜெயகுமார் அவர்கள் புத்தமும் அவரது தம்மமும் நூலே தன் படங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது என்று பேசினார்இயக்குனர் Dr.பிஜு அவர்கள் என் கதையை என் வாழ்வியலின் அடிப்படையில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என் படங்களும் இருக்கும் என பேசினார். இறுதியாக தண்டகாரண்யம் படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை, பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன், மேற்கு தொடர்ச்சி மலைபடத்தின் இயக்குனர் லெனின் பாரதி, திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் எழுத்தாளர் தமிழ் பிரபாஆகியோர்கள் கலந்துரையாடிய இயக்குனர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து  பலபடங்கள் திரையிடப்பட்டு, PK ரோசி திரைப்பட திருவிழாவின் கடைசி நாள் இனிதே நிறைவடைந்தது.