“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும்பைக் டாக்சிபடத்தின் முதல் பதாகை வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள  நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.*********

இவ்விழாவினில்பைக் டாக்சி படத்தின் தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் பேசியதாவது.. இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டுபடங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாகலைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம். அதே போல் இந்தப்படமும் சமூக அக்கறை மிக்கபடைப்பாக இருக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், வெற்றிப்படங்களை விட நல்ல படைப்புகளை  மட்டுமே தரவேண்டுமென நினைக்கிறோம். இதில் ஏன் பெரிய ஹீரோ இல்லை எனக் கேட்கிறார்கள். இப்படம் மூலம் நக் ஷாசரண் எனும் மிகப்பெரிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஆண் பெண் வேறுபாட்டைக் கலைந்து, எங்கள் நிறுவனம் மூலம் அவரை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறோம்.  பைக் டாக்சி ஓட்டும் ஒரு பெண்அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை.   இப்படம் மிகச்சிறப்பான சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசியதாவதுஎன் படத்தின் தயாரிப்பாளர்கள், என்  குருநாதர் சுசீந்திரன், என் குடும்பம் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தகாலகட்டத்தில் மூன்று படங்கள் செய்வது என்பது மிகக் கடினமானது. அதையும் தாண்டி பல கஷ்டங்களுக்குஇடையில் தான் இப்படம் செய்கிறோம். வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பெரிய வெற்றிப்படத்தினை உருவாக்கும் முனைப்போடு தான் அனைவரும் வந்துள்ளோம். இப்படத்திற்காக ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.