செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு..அருண்ராஜ், ..., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.

 கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது.  மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான 30 விருதாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.  66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான கலைமுதுமணி திரு.பெ. பாலகிருஷ்ணன், ஓவியம், திரு. K.S. ஆறுமுகம், தவில், திருமதி. பா. சூரியா, கிராமிய நாடகம், திரு. ரா. ஸ்ரீதரன், மிருதங்கம், திரு. கெ. சந்திரன், பம்பை, கைச்சிலம்பு, திருமதி.  . கஸ்தூரி,    கிராமிய நாடகம் ஆகியோருக்கும் 51 வயதுமுதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கான  கலை நன்மணி விருதினை  திரு தி. வேதகிரி, நாடகம், திருமதி.எம். ராஜிவி, கிராமிய நாடகம், திரு. மா.. சுப்பிரமணியன், நாடகம், எழுத்தாளர், திரு..ராகவன், நாதஸ்வரம், திரு. கோ. ஜெகநாதன், பம்பை, கைச்சிலம்பு, திரு.R.சூரியநாராயணன், மிருதங்கம் ஆகியோருக்கும் வழங்கினார்.

   36 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கான  கலைச்சுடர்மணி விருதினை  திரு.ரா.கோவிந்தசாமி, பம்பை, திரு.சு. சிவக்குமார், பரதநாட்டியம், திரு.கு. பாபு, சிலம்பாட்டம், திரு.எஸ். சங்கர், கஞ்சீரா, திரு.எம்.கே. ஆசன், தவில், டாக்டர். தே. பத்ரி நாராயணன், வயலின் ஆகியோருக்கும் 19 – 35 வயதுக்குட்பட்டோருக்கான  கலை வளர்மணி விருதினை திரு.பா. சிவராமன், சிலம்பாட்டம்திரு.மு. சண்முகம், ஓவியம், திரு. பி. நிர்மல்ஹரிஷ், குரலிசை, திருமதி.ஜெயஸ்ரீ ரவிசந்திரன், பரதநாட்டியம், செல்வி.ஹரிணி பாலாம்பிகா, பரதநாட்டியம்,              செல்வன். டி.பி..அருண் விஸ்வேஷ்வரன், நாதஸ்வரம்ஆகியோருக்கும் வழங்கினார்.                                           18 வயதுக்குட்பட்டோருக்கான  கலை இளமணிவிருதினை  செல்வன். சு. ஷரோன், சிலம்பாட்டம், செல்வன். பி.. சாய் அருண், ஓவியம், செல்வி ரா. சயாலிஅஸ்லி குயின், ஓவியம், செல்வி. ரா. ஸ்ரீநிதி, பரதநாட்டியம், செல்வி. ஜனனி நாராயணன்,     குரலிசை, செல்வன். சு. விஷ்வஜித், கைச்சிலம்பாட்டம்  ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் விருதுகள்வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சி.நீலமேகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.