புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து நடத்தும், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கண்ணோட்டத்தின் வழியே” “இந்திய தேசிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைமை காப்பாளர் கே. கைலாசநாதன் தொடங்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்கில் வரவேற்புரையாற்றிய டாக்டர் நந்த கிஷோர், இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை துணைநிலை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தினார். இந்தக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரிதேஷ் ராய், சர்தார் வல்லப்பாய் பட்டேலின் 150-ம் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் கருத்தரங்கின் கருப்பொருளை எடுத்துரைத்தார். நாடு முழுவதுமிலிருந்து பெறப்பட்ட 150 சுருக்கக் கட்டுரைகளில் 90 தேர்வு செய்யப்பட்டுதாகவும் அவர் கூறினார். 16 மாநிலங்களைச் சேர்ந்த 30 பல்கலைக்கழகங்களிலிருந்து இந்தக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் படேலின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

இந்தக் கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, ஜுனாகத் மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளை ஒருங்கிணைத்த படேலின் துணிச்சலான தலைமைத்துவ பண்பு போற்றத்தக்கது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாசநாதன், சர்தார் வல்லப்பாய் படேல் சிறந்த தேசபக்தராக திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார்.