ஜிப்மர் மருத்துவக் கல்வியில் மிக முக்கிய நிகழ்வாக ஜிப்மர் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல், அறிவியல் மாணவர்களை இணைத்துINCUBATE 2025 என்ற மருத்துவ தொழில்நுட்ப ஹேக்கத்தானை நடத்தியது. இது இந்தியாவின்சிறந்த மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்களை இணைத்து நவீன காலத்தில் உள்ளமருத்துவம் சார்ந்த சவால்களுக்கு எளிய தீர்வுகளை வெளிக்கொணரும் ஒரு நிகழ்வாகநடத்தப்பட்டது. இன்று 05.10.2025 இதற்கான இறுதிகட்ட போட்டிகள் நடைபெற்றன.
7 நாடுகள் மற்றும் 28 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 400-க்கும் மேற்பட்ட அணிகளும் கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற பல்வேறு சுற்றுகளில் கடுமையாகபோட்டியிட்டன. இந்த போட்டிக்கான கருப்பொருட்கள் பொது சுகாதாரம், இருதயவியல், புற்றுநோயியல், மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பலதரப்பட்ட மருத்துவ பிரிவுகளில் பல்வேறுதுறைகளைச் சார்ந்த மாணவர்களைக் கொண்டு குழுக்களாக நடைபெற்றது. “நவீனகண்டுபிடிப்புகளுக்கு ஆர்வமே மூலம்” என்ற அடிப்படையில் INCUBATE 2025 நவீனகண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம், மருத்துவ செயல்திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைஉள்ளடக்கி பலதரப்பட்ட மருத்துவ சவால்களுக்கு தீர்வுகளை முனைப்புடன்வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் 2-4 உறுப்பினர்களைகொண்ட குழுக்களாக இணைந்து ஒருங்கிணைந்த, தொழிநுட்ப ரீதியான தீர்வுகளை மருத்துவசவால்களுக்கு வழங்கினர். பலதரப்பட்ட போட்டி நிலைகளைக் கடந்து இறுதிகட்ட போட்டிக்கு 15 குழுக்கள் தகுதி பெற்றுள்ளன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஜிப்மர் மற்றும் இந்தியதொழில்நுட்பக் கழகம், மும்பை (IIT Bombay) நிபுணர்கள் தேவையான வழிகாட்டுதலை வழங்கினர். இந்த நிகழ்வை Koita Centre for Digital Health (KCDH), ஜிப்மர் இளநிலை அறிவியல் மற்றும்ஆராய்ச்சிக் குழு, இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை ஆகியவை இணைந்து நடத்திய இந்தநிகழ்வை ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி, கொய்தா அறக்கட்டளையின் இணை நிறுவனர்திரு. ரிஸ்வான் கொய்தா, ஜிப்மர் ஆராய்ச்சி முதல்வர் டாக்டர் சுனில் நாராயன், ஜிப்மர் கல்லூரிமுதல்வர் டாக்டர் விக்ரம் காடே, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வினோத் குமார்ஆகியோர் துவக்கிவைத்தனர். இதை தொடர்ந்து ஜிப்மர் ஆராய்ச்சி முதல்வர் டாக்டர் சுனில்நாராயன் பேசுகையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை வளர்ப்பதன் அவசியத்தை மற்றும் சுகாதாரதேவைகளுக்கான தொழில்நுட்பத்தில் நவீன கட்டமைப்பையும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில்உரையாற்றிய ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி அவர்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பநிறுவனங்கள் இணைந்து நாட்டின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகளைகண்டுபிடிப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார். அதற்கு ஜிப்மர் மற்றும் மும்பை இந்தியதொழில்நுட்ப கழகம் முன்னோடி நிறுவனங்களாக இணைந்து செயல்பட்டதை குறிப்பிட்டார். விழாவில் சிறப்புரையாற்றிய
ரிஸ்வான் கொய்தா தரப்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் கொய்தா அறக்கட்டளையின் பங்குகள் குறித்து கூறினார். மேலும் இந்தியாவில் முன்னனி மருத்துவநிறுவனமாக விளங்கும் ஜிப்மர் அதன் தரத்தில் நாட்டிலேயே சிறந்த மருத்துவ கல்வி நிறுவனமாகவிளங்குகிறது என்றும் கூறினார்.
இன்றைய நிகழ்வில் ஜிப்மர் இளங்கலை மருத்துவ மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகழகத்தின் சிறப்பு இணையதளம் மற்றும் ஆராய்ச்சி இதழ் வெளியிடப்பட்டது. இது ஜிப்மரின்நவீனத்துவமான மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு புதிய துவக்கத்தை குறிக்கிறது. 15 இறுதி போட்டியாளர்கள் தேர்வான நிலையில் இறுதியில் 3 குழுக்கள் நடுவர்களின் பரிசுகளைபெற்றன. முதல் இடத்தில் Team Bridging the Gap அணியில் இடம்பெற்ற பிரித்திவின்சிபி, பிரதாப், நிகிலேஷ், கௌதம் அணியினர் உருவாக்கிய பச்சிளம் குழந்தைகளுக்கான சென்சார் உடன் இணைந்ததாய்ப்பால் ஊட்டும் குப்பி பரிசை பெற்றது. இரண்டாவது இடத்தில் Team BiliQ அணியில் சுதர்தன், தாணு ரிதன்யா, தர்சினி, ஸ்ரீஹரிணிகொண்ட குழுவினர் உருவாக்கிய பச்சிளம் குழந்தைகளின் பித்தநீர் ஆய்வில் பயன்படுத்தப்படும்காகித மிண்ணணு அட்டை இடம்பிடித்தது. மூன்றாவது இடத்தில் Team Hrid AT குழுவினர் சௌமன்பா திங்ரா, அங்கித் கோஷ், சர்தக் AC 3 மசும்தர், சான்வி புரி ஆகியோர் உருவாக்கிய சாதாரண இருதய சத்தங்கள் மற்றும் கோளாறுகளைதுரிதமாக கண்டறிய உதவும் கையடக்க சாதனம் இடம் பிடித்தது. மேலும் போட்டியில் பங்பேற்ற 20 குழுக்கள் பல்வேறு சிறப்பு பரிசுகளை பெற்றனர்.