‘தி கோட் லைஃப்’ படத்தின் பதாகையை துல்கர் சல்மான் வெளியிட்டார்

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமானதி கோட் லைஃப்படத்தின் அடுத்தடுத்தப் பதாகைகளை  இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின்மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘பதாகையை நடிகர் ரன்வீர்சிங்தி லுக் பிஃபோர்என இரண்டாவது பார்வை பதாகையை பகிர்ந்த நிலையில், இப்போது நடிகர் துல்கர்சல்மான், பிருத்விராஜின் படத்தில் இருந்து பதாகையை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தீவிரமான பதாகைகளுக்கு முற்றிலும் மாறாக, இந்த தோற்றம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.******

பிருத்விராஜின்தி கோட் லைஃப்படத்தின் மூன்றாவது பதாகை புத்துணர்ச்சியூட்டுவதாகவும், பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும் வசீகரம்நிறைந்ததாகவும் உள்ளது.

விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ளதி கோட் லைஃப்படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்தியநடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலிவடிவமைப்பை அகாடமி விருது வென்ற .ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். . ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில்இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன்ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குஇந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமானதி கோட் லைஃப்திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.