“பீனிக்ஸ்” திரைபட விமர்சனம்

ராஜலட்சுமி அனல் அரசு தயாரிப்பில், அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷிணி, முத்துக்குமார், திலீபன், அஜய்கோஸ், ஹாரிஸ் உத்தமன், மூனார் ரமேஷ், காகா முட்டை விக்னேஷ், அபி நட்சத்திரா, வஷா விஸ்வநாத், நவேன், ரோஹித், மதுவசந்த், கிஷோர், ரிகன், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பீனிக்ஸ்”. சூர்யா விஜய்சேதுபதி 17 வயது சிறுவனாக இருக்கும்போது ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சம்பத்ராஜை நடுச்சாலையில் பொதுமக்கள் அனைவரும் பார்க்க 32 இடங்களில் அரிவாளால் வெட்டி கொத்தி குதறி படுகொலை செய்கிறார். அவரை காவலர்கள் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் நீதிபதி யின் உத்தரவுபடி அடைக்கிறார்கள். சிறையிலேயே சூர்யா விஜய்சேதுபதியை கொலை செய்ய,  கொலை செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சம்பத்ராஜின் மனைவி வரலட்சுமி சரத்குமார் பல ரவுடிகளை சிறைக்கு அனுப்புகிறார். சம்பத்ராஜை சூர்யா விஜய்சேதுபதி ஏன் கொலை செய்தார்?. சூர்யாவை கொலை செய்ய சிறைக்குச் சென்ற ரவுடிகள் என்ன ஆனார்கள்? என்பதுதான் கதை. சூர்யா, நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதியின் மகன் என்பதால் திரையரங்கு ரசிகர்கள்ளல் நிறைந்து காணப்பட்டது. படத்தை இயக்கியது பிரபல சண்டைக்காட்சி இயக்குநர் அனல் அரசு. அதனால் படம் ஆரம்பம் முதல் முடிவுவரை சண்டைக்காட்சிகளே திரையை ஆக்கிரமித்துக் கொண்டது. நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகனை திரையில் எப்படி அறிமுகப்படுத்தப்படுவார்களோ அந்த அந்தஸ்தில் சூர்யா விஜய்சேதுபதியையும் இயக்குநர் அனல் அரசு திரையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு தகுதியானவராகத்தான் சூர்யா விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். அவர் பேசுன் வசனங்கள் படத்தில் மிக் மிக குறவுதான். ஆனால் தன் கதாபாத்திரத்தை உடல்மொழியால் அலாதியாக திரையில் உரையாடுகிறார். அவ்வளவு நேர்த்தியான நடிப்பை கொட்டிக் குவித்துள்ளார் சூர்யா விஜய் சேதுபதி. திரைவானில் இனி அவர் ஜொலிக்கும் நட்சத்திரமாக பிரகாசிக்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லியின் வேடத்த்குக்கு இனி வரலட்சுமியைத்தான் இயக்குநர்கள் தேர்வு செய்வார்கள் போலிருக்கிறது. வில்லிக்கு துல்லியமாக பொருந்தி நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தில் தாய் பாசத்தை கொட்டி நடித்திருக்கும் தேவதர்ஷிணியை பாராட்டாமல் இருக்க முடியாது. சிறையிலிருக்கும் மகனுக்காக காவலர்களிடம் தேவதர்ஷிணி கெஞ்சுவது தாய் பாசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. சாவுவீட்டு பாட்டும் குத்துச்சண்டைக்கு கொடுத்திருக்கும் பின்னணி இசையும் இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ். படத்தை உயிரோட்டமாக்கியுள்ளார்.