மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சியில் (27.12.2023) மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,..., அவர்கள் பார்வையிட்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று இத்திட்டத்தை துவக்கி வைத்ததை யொட்டிஇராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை 06 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீதுமனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் நோக்கம் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்தசிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைத்திடும்வகையில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் தொடர்ந்து06.01.2024 வரை அந்தந்த பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஒருங்கிணைத்து இந்த சிறப்புமுகாம் நடைபெறும் இம்முகாம் நடைபெறும் பொழுது அந்தந்த வார்டுக்கு உட்பட்ட நகராட்சி மற்றும்பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்துவிண்ணப்பித்து பயன் பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,..., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.பா.விஷ்ணு சந்திரன்,..., அவர்கள் பார்வையிட்டார். இதேபோல் இராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில்இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு முகாமைபார்வையிட்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முத்தான திட்டங்களின் ஒன்றாக மக்களுடன் முதல்வர் திட்டம்இருந்து வருவதுடன் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் நகராட்சிமற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் 13 துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றுபொதுமக்களிடம் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுத்திடும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் வசிப்பிட பகுதிகளிலே வந்து முகாம் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள்பெறுவதன் மூலம் எளிதாக அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட  பயனுள்ளதாக இருக்கும். இராமேஸ்வரம் நகராட்சியை பொறுத்தவரை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பானகோரிக்கைகளே அதிகளவில் உள்ளது. எனவே வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்துபொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து நிறைவேற்றி தர வேண்டுமெனஇராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தெரிவித்தார்.