பொறியியல் பதவிக்கான எழுத்து தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம், .வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மற்றும் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சி தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,...,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் டி.டி.விநாயகர்மேல்நிலைப்பள்ளி, .வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இத்தேர்வு காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்வுகளில் மொத்தம் 2211 நபர்கள் விண்ணப்பித்ததில் 1468 நபர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தில் தேவையான உட்கடமைப்பு வசதிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தேர்வு நடைபெறும் இடங்களில் கண்காணிப்புக்குழு மூலம் ஒளிப்பதிவுசெய்யப்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.