பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் (முத்திரை) ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்தவருடம் டிசம்பர் 2022-ஆம் ஆண்டு அடைந்த வருவாயை விட 2023-ம் ஆண்டு டிசம்பர்    முடியவுள்ள காலத்தில்கூடுதலாக ரூ.916/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அடுக்குமாடிகுடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு (Composite Value) அடிப்படையில் முத்திரைத்தீர்வை மற்றும்பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வுமேற்கொண்டார்கள், கூட்டுமதிப்பு தொடர்பாக 01.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்அறிவுறுத்தியபடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனஅறிவுறுத்தினார். மேலும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டியதொகைகளை தொய்வின்றி வசூலிப்பது, சார்பதிவகங்களில் உரிய காரணங்களின்றி நிலுவையில் வைத்துள்ளஆவணங்களை விடுவிப்பது, பொது மக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையானநடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்த வருவாய்இலக்கு எய்தப்பட வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச்செயலாளர்  பா.ஜோதி நிர்மலாசாமி, ..,.  பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ..., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறைதலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.