தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு

தமிழக மின்வாரியம் சார்பாக 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை (Fixed Charges)  திரும்பப்பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம் (Peak Hours Charges), கட்டிட மேற்கூரைகளில்அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி சோலார் (Solar) திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை நீக்கவேண்டும் எனவும், Multi Year Tariff உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகளுக்குமின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (16.10.2023) உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற உள்ளது.

 தமிழகத்தின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றும் பங்கு இன்றியமையாதது. பல்வேறு அந்நிய நிறுவனங்கள் மாநிலத்திற்குள் வந்து செயல்பட்டாலும், தயாரிப்புகளை முழுமைப்படுத்தி, ஏற்றுமதிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நமது சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தான். பொருளாதாரம் மந்தநிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை, பொருளாதார சரிவு, சிறு,குறு தொழில்கள் நலிவு என சுமார் 3,50,000 தொழில் முனைவோர்கள் கடந்த 1 ஆண்டு காலமாகபாதிக்கப்பட்டிருப்பதை அறியும்போது மிகுந்த வேதனையாக உள்ளது.

 பொருளாதாரத்தில் முன்னேற முதன்மையாக சலுகைகள் வழங்கப்பட வேண்டிய துறையான தொழில்துறை மீதுஏற்றப்படும் பல்வேறு சுமைகளால் மாநிலத்தின் வருவாய் குறைவதுடன், தொழில்கள் முடங்கி வேலைவாய்ப்பும்பறிபோகும் சூழல் உள்ளது.

 தொலைநோக்கு சிந்தனையுடன் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பணிகளை சுலபமாக்கும் வகையில், தொழில் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தால், பிற மாநிலங்களில் இல்லாத வகையில் அதற்கும்கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. மின் தேவை மற்றும் கால மாற்றத்திற்கேற்ப சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அரசு, அதற்குகட்டணம் வசூலித்து கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதல்ல. தமிழக அரசின் மின் உயர்வு கொள்கையால்அண்டை மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து நம் தேவைக்கான பொருட்களையும் கூட இறக்குமதிசெய்யப்படும் சூழலுக்கு தள்ளப்படலாம். அந்த சூழலில், பொதுமக்கள் விலையேற்றத்தால் கடுமையாகபாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.