“கா” திரைப்பட இசை வெளியீட்டு விழா

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும்,  தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்துஉருவாகியுள்ள திரைப்படம்,  “கா”.  இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின்இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது.  *******

இவ்விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவதுகா ல்லோரும் ஈஸியா ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சிம்பிளான டைட்டிலாக வைத்து விட்டார் இயக்குநர். படம் எடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது சில கரக்சன்கள் இருந்தது அதனால் தான் இந்த தாமதம். எல்லோரும்என்ன பிரச்சனை எனக் கேட்டார்கள். சினிமாவைப் பொறுத்தவரை அது நம் கையில் இல்லை. எல்லாம் மேலே உள்ளவன் மனசு வைக்க வேண்டும், இறுதியாக உங்கள் முன் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாஞ்சில் மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். நானே ஆரம்பத்தில் நம்பவில்லை திரைக்கதையை  அத்தனைஸ்பீடாக கொண்டு போயுள்ளார். மும்பையில் படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டினார்கள்படம்கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

இயக்குநர் நாஞ்சில் பேசியதாவதுமெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம்அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம்ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சார் அவரை நிறையப் போராடித்தான் வரவைத்தேன். கதையைக் கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றிக் கேட்டார் எனக்குப் பிடித்தஇயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன் எப்போதுவேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது வருத்தம். என் படக்குழுவினர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரித்த என் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு படமாக இருக்கும். நன்றி.

நடிகை ஆண்ட்ரியா பேசியதாவதுநாஞ்சில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்னதாககேட்ட கதை இப்போது திரைக்கு வந்துள்ளது. ஒரு படம் குழந்தை என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அம்மா அப்பா மாதிரி. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே படம் நன்றாக வரும். இப்படத்தில்அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.  காடு எனக்குக் கடவுளை விட  மிகவும் பிடிக்கும். நிஜமான சிக்னலே இல்லாத பல இடங்களில் காட்டின் உள்ளே  போய் படம் எடுத்துள்ளோம். நாங்கள் பட்டகஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.