முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி

தமிழக அரசு, எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும்நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவைதீர்மானம் நிறைவேற்றி விரைவாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும் என்கிறகோரிக்கையை முன்வைத்து, இன்று (செப்.09)  சட்டமன்றம் நோக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களுடன்மாபெரும் பேரணியை எஸ்.டி.பி.. கட்சி நடத்தியது.

எஸ்.டி.பி.. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில அமைப்புப்பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் .கே.கரீம், ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுல்ஃபிகர் அலி, ஷபீக் அஹம்மது, பஷீர் சுல்தான், முஜீப் ரஹ்மான், பையாஸ்அகமது, வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, எஸ்டிடியூ மாநில தலைவர் ஆசாத் மற்றும் சென்னைமண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கோரிக்கை பேரணியில் மே17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுகஆய்வு மையச் செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், விசிக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிபிசந்தர், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, மூத்த வழக்கறிஞர் .பா.மோகன், தமிழகவாழ்வுரிமை கட்சி மாநில பேச்சாளர் மாரிமுத்து உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுகோரிக்கையை வலியுறுத்தி உரைநிகழ்த்தினர்.

முன்னதாக சட்டமன்றம் நோக்கி பேரணியாக சென்ற எஸ்.டி.பி.. தலைவர்கள் மற்றும் தொண்டர்களைபோலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்உரையாற்றுகையில்; “முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் கோரிக்கை என்பது தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டுகோரிக்கையாகும். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலைவர்களுடைய பிறந்த நாளின் போது குறிப்பிட்டவருடங்களை சிறையில் கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பின் அடிப்படையில்கருணையோடு விடுதலை செய்வது என்பது வழமையாகி வருகிறது.  ஆனால், ஆட்சிகள் மாறிய போதும்காட்சிகள் மாறவில்லை என்பதற்கிணங்க, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மட்டும் தொடர்ந்து வரும்ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசின் கருணையில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம்காட்டப்படுகின்றது.

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தற்போது 37 முஸ்லிம் சிறைக்கைதிகள் 14 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாகஉள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசியல் சட்டப் பிரிவு 161 ன் படியும் முஸ்லிம்சிறைவாசிகளின் விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்கிற சூழலில், அரசு நிர்ணயித்த அத்தனைதகுதிகளையும் கொண்டவர்களாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் இருந்தும், அவர்களின் விடுதலை மட்டும்ஒவ்வொரு முறையும் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைவிடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்திவந்தன. இந்நிலையில், தமிழக அரசு முஸ்லிம் சிறைக் கைதிகள் உள்பட 49 சிறைக் கைதிகளை விடுதலைசெய்யும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தரப்பிலிருந்து செய்திகள்வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இந்த பரிந்துரை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஆளுநர்பக்கம் சிறைவாசிகள் விடுதலையை தள்ளிவிட்டு தமிழக அரசு மவுனமாகி விடக் கூடாது.  தமிழக ஆளுநர்எப்படிப்பட்டவர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும், அதைவிட தமிழக அரசுக்கு நன்றாகதெரியும். ஏற்கனவே, தமிழக அரசின் பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் மாளிகைகோப்புகளால் நிரம்பி வழியும் நிலையில், சிறைவாசிகளின் பரிந்துரை கோப்பும் ஆளுநர் மாளிகை போய்சேர்ந்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை செவிமடுக்காத ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் எத்தனைஆண்டுகள் சிறைவாசிகள் காத்துக் கிடப்பது என்கிற கேள்வி எழுகிறது.

ஆகவே, முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவை தீர்மானத்தைஉடனடியாக நிறைவேற்றி, விடுதலை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். ஏனெனில் அமைச்சரவைதீர்மானம் தான் உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருக்க முடியும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாகதீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவைக்கு உரிமை உண்டு என்பதையும், அந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் ஒன்றுக்கு பல முறை அழுத்தம் திருத்தமாககூறிவிட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை சாத்தியமானதும் அமைச்சரவை தீர்மானத்தால்தான். எனவே தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைதொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விரைவாக விடுதலை செய்திட வேண்டும். தமிழகமுஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என இந்த பேரணி வாயிலாக தமிழகஅரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.